நடிகையின் கூரியர் செலவு ரூ.18 லட்சம்


நடிகையின் கூரியர் செலவு ரூ.18 லட்சம்
x
தினத்தந்தி 1 March 2019 11:00 PM GMT (Updated: 1 March 2019 6:43 PM GMT)

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நடிகையும், மாடல் அழகியுமான காரா டெலிவிஞ்ச், கூரியருக்கு ரூ.18 லட்சம் செலவு செய்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

காரா டெலிவிஞ்ச் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து போஸ்ட்மேட்ஸ் என்ற கூரியர் நிறுவனம் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி வருகிறார். இந்த நிறுவனம் உணவு, மளிகை பொருட்கள், மதுபானம் போன்றவற்றை ஆர்டர் செய்தால் அவற்றை கடையில் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக் கும். இதற்காக தனி கட்டணம் வாங்கிக் கொள்ளும். 

இந்த நிறுவனத்தின் மூலம் இதுவரை 482 தடவை பொருட்களை காரா டெலிவிஞ்ச் ‘ஆர்டர்’ செய்து வாங்கி இருக்கிறார். 1038 பொருட்களை 234 கடைகளில் இருந்து வாங்கி காராவுக்கு இந்த நிறுவனம் டெலிவரி செய்துள்ளது. இதற்காக இந்த போஸ்ட்மேட்ஸ் கூரியர் நிறுவனத்துக்கு மட்டும் ரூ.17.8 லட்சத்தை காரா செலவு செய்து இருக்கிறார். கூரியர் கம்பெனிக்கு லட்சக்கணக்கில் அவர் செலவு செய்ததை இங்கிலாந்தில் ஆச்சரியமாக பேசுகிறார்கள்.

Next Story