“பயங்கரவாதிகள் மீது 100 குண்டுகள் வீசுவேன்” - ராக்கி சாவந்த் ஆவேசம்


“பயங்கரவாதிகள் மீது 100 குண்டுகள் வீசுவேன்” - ராக்கி சாவந்த் ஆவேசம்
x
தினத்தந்தி 4 March 2019 4:50 AM IST (Updated: 4 March 2019 4:50 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதிகள் மீது 100 குண்டுகள் வீசுவேன் என நடிகை ராக்கி சாவந்த் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.


தமிழில் என் சகியே, முத்திரை படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியவர் ராக்கி சாவந்த். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் புலமாவா தாக்குதலில் ஈடுபட்டதற்காக பாகிஸ்தானை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“புலவாமா தாக்குதலுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்து உள்ளது. இந்த பிரச்சினையில் பிரதமர் நரேந்திரமோடி எடுத்துள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அவர் தகுந்த பதிலடி கொடுத்து இருக்கிறார். அவருக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். நான் நாட்டிற்காக எனது உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

பாகிஸ்தான் எல்லைக்குள் 50 அல்லது 100 வெடிகுண்டுகளை எடுத்துச் சென்று பயங்கரவாதிகள் மீது வீசி அவர்களை அழிக்கவும் தயாராக இருக்கிறேன். அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.

அபிநந்தன் நாடு திரும்பியதற்காக இந்தி நடிகர்-நடிகைகள் பலர் சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியை வெளியிட்டு கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.


Next Story