சினிமா செய்திகள்

குடிபோதையில் அடித்து சித்ரவதை கணவர் மீது நடிகை போலீசில் புகார் + "||" + Actress on the husband complains to police

குடிபோதையில் அடித்து சித்ரவதை கணவர் மீது நடிகை போலீசில் புகார்

குடிபோதையில் அடித்து சித்ரவதை கணவர் மீது நடிகை போலீசில் புகார்
குடிபோதையில் அடித்து சித்ரவதை கணவர் மீது நடிகை போலீசில் புகார்
பிரபல இந்தி நடிகை அர்ஜூ கோவித்ரிகா. இவர் நாகினி உள்ளிட்ட இந்தி டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார். அர்ஜூ கோவித்ரிகா கடந்த 2010-ல் தொழில் அதிபர் சித்தார்த்தை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஆஷ்மான் என்ற ஆண் குழந்தை உள்ளது.

தற்போது இருவருக்கும் கருத்து வேற்பாடு ஏற்பட்டு உள்ளது. சித்தார்த் மீது அர்ஜூ கோவித்ரிகா மும்பையில் உள்ள ஓர்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “பல வருடங்களாக சித்தார்த் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னை கொடுமைப்படுத்தி வருகிறார். சித்தார்த்துக்கு குடி பழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார். கடந்த 15-ந் தேதி எங்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாலை 4 மணிக்கு என்னை குளியல் அறைக்குள் இழுத்துச் சென்றார். அங்கு வைத்து என்னை கடுமையாக அடித்தார். எனது குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்” என்று கூறியுள்ளார்.

சித்தார்த் தன்னை அடித்து சித்ரவதை செய்த கண்காணிப்பு கேமரா வீடியோ ஆதாரங்களையும் போலீசாரிடம் வழங்கி உள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை சித்தார்த் மறுத்துள்ளார். டி.வி. தொடர் ஒத்திகை பார்க்க தன்னை அடிக்கும்படி சொல்லி அதை வீடியோவாக எடுத்து என் மீது பொய் புகார் கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.