சினிமா செய்திகள்

பேட்மிண்டன் வீராங்கனைசாய்னா நேவால் வேடத்தில், பரினீதி + "||" + Saina Nehwal role, parineeti

பேட்மிண்டன் வீராங்கனைசாய்னா நேவால் வேடத்தில், பரினீதி

பேட்மிண்டன் வீராங்கனைசாய்னா நேவால் வேடத்தில், பரினீதி
சாய்னா நேவால் வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகை பரினீதி சோப்ராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் நடிகை ஷ்ரத்தா கபூரை, சாய்னா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். இதன் படப்பிடிப்பு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஐதராபாத்தில் தொடங்கியது. பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் படப்பிடிப்பை தொடங்கிவைத்தார். அமேல் குப்தே படத்தை இயக்கினார்.

இதன் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது ஷ்ரத்தாவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பை தள்ளிவைத்தனர். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டனர். ஆனால் திடீரென்று இந்த படத்தில் இருந்து ஷ்ரத்தா கபூர் விலகி உள்ளார்.

படப்பிடிப்பு தேதிகளை அடிக்கடி மாற்றி அமைத்ததால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாமல் அவர் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து அவருக்கு பதிலாக சாய்னா நேவால் வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகை பரினீதி சோப்ராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் புஷன் கூறும்போது, “கால்ஷீட் பிரச்சினையால் ஷ்ரத்தாவால் இதில் நடிக்க முடியவில்லை. இதனால் படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். எனவே அவருக்கு பதில் பரினீதி நடிக்கிறார். இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து அடுத்த வருடம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...