சினிமா செய்திகள்

நடிகர் ஜானி டெப் முகத்தில் குத்தி கையை முறித்த மனைவி கோர்ட்டில் தகவல் + "||" + Actor Johnny Depp face Wife broke his hand Information on the court

நடிகர் ஜானி டெப் முகத்தில் குத்தி கையை முறித்த மனைவி கோர்ட்டில் தகவல்

நடிகர் ஜானி டெப் முகத்தில் குத்தி கையை முறித்த மனைவி கோர்ட்டில் தகவல்
‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜானிடெப்.
டெட்மேன், ஸ்லீப்பி ஹாலோவ், பிரம்ஹெல், சீக்ரெட் விண்டோ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

ஜானிடெப்புக்கு தற்போது 55 வயது ஆகிறது. இவர் 1983-ல் லோரி அன்னி அல்லிசன் என்பவரை மணந்து இரண்டு வருடத்தில் விவாகரத்து செய்தார். அதன்பிறகு ஹாலிவுட் நடிகை அம்பெர் ஹெர்டை 2015-ல் மணந்து 2017-ல் விவாகரத்து செய்தார்.


ஜானிடெப் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக அம்பெர் ஹெர்ட் சமீபத்தில் கூறி இருந்தார். இது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் புதிய ‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படத்தில் இருந்து ஜானிடெப் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அம்பெர் ஹெர்ட் தனது புகழை கெடுக்கும் நோக்கில் அவதூறுகளை பரப்பியதாகவும் தனக்கு ரூ.355 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் கோர்ட்டில் ஜானிடெப் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின்போது அவரது வழக்கறிஞர்கள், “ஜானிடெப்பை ஆம்பர் ஹெர்ட் முகத்தில் குத்தி அவரது கைவிரலை துண்டித்துள்ளார்” என்று தெரிவித்தனர்.

அதற்கான வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர். ஜானிடெப் கூறும்போது, ‘அம்பெர் ஹெர்ட்டுதான் என்னை தாக்கினார். நான் அவரை அடிக்கவில்லை’ என்றார்.