சினிமா செய்திகள்

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் + "||" + Acting in Jayalalithaa role Kangana Ranawatte Rs 24 crore salary

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம்

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம்
டைரக்டர் விஜய்யும் ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து அவரது வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்தை தேர்வு செய்துள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரியதர்ஷினி ‘த ஐயன் லேடி’ என்ற பெயரில் படமாக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். பாரதிராஜாவும் அவர் வாழ்க்கையை படமாக்குவதாக தகவல் வெளியானது.


இந்த நிலையில் டைரக்டர் விஜய்யும் ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து அவரது வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்தை தேர்வு செய்துள்ளார். இவர் தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம்தூம் படத்தில் நடித்து இருந்தார். இந்தியில் குயின் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இயக்குனர் விஜய் கூறும்போது, “இந்தியாவின் முக்கியமான தலைவரான ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி என்ற பெயரில் படமாக்குவது பெருமையாக இருக்கிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிப்பது மேலும் சிறப்பானது” என்றார்.

இந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசி இருப்பதாக இந்தி இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய படத்தில் நடிக்க எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை. கங்கனா தற்போது ‘பங்கா’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் ஜெயலலிதா வாழ்க்கை கதையில் நடிக்க உள்ளார்.