சினிமா செய்திகள்

கொலைகாரன் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. + "||" + Vijay Antony is currently working on 'Killingakaran'.

கொலைகாரன் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

கொலைகாரன் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இசையமைப்பாளராக இருந்து கதாநாயகன் ஆன விஜய் ஆண்டனி தற்போது, ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.
கொலைகாரன் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. படம் பற்றி படத்தை டைரக்டு செய்திருக்கும் ஆண்ட்ரு லூயிஸ் கூறுகிறார்:-

“இந்த படத்தின் கதையை விஜய் ஆண்டனியிடம் சொன்னபோது, “கதை நன்றாக இருக்கிறது. நான் நடிக்கிறேன்” என்றார். படத்துக்கு என்ன ‘டைட்டில்’ வைக்கலாம்? என்று கேட்ட அவர், அடுத்த நாளே ‘கொலைகாரன்’ என்ற ‘டைட்டில்’ எப்படியிருக்கிறது?” என்று கேட்டார். கதைக்கு மிகவும் பொருத்தமான ‘டைட்டில்’ என்று படக்குழுவினர் அனைவரும் ஒருமித்த குரலில் சொன்னோம்.

கதைப்படி, விஜய் ஆண்டனி பல கொலைகளை செய் கிறார். அவர் ஏன், எதற்காக அந்த கொலைகளை செய்கிறார்? என்பதுதான் கதை. படத்துக்கு விஜய் ஆண்டனிதான் இசையமைப்பதாக இருந்தார். வேலைப்பளு காரணமாக அவர் இசையமைக்கவில்லை. சைமன் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் இசை, அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும்.

படத்தில், விஜய் ஆண்டனி மூன்று விதமான தோற்றங்களில் வருவார். மர்ம கொலைகளை பற்றி துப்பு துலக்கும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் நடித்து இருக்கிறார். கதாநாயகியாக மும்பை அழகி ஆஷிமா நடித்துள்ளார். படம், விரைவில் திரைக்கு வரும்.”