சினிமா செய்திகள்

விஜய் படப்பிடிப்பை சென்னையில் நடத்துவது ஏன்? + "||" + Vijay shooting Why is conducting in Chennai?

விஜய் படப்பிடிப்பை சென்னையில் நடத்துவது ஏன்?

விஜய் படப்பிடிப்பை சென்னையில் நடத்துவது ஏன்?
விஜய் நடிக்கும் 63-வது படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னையிலேயே நடைபெற்றது.
விஜய் நடிக்கும் 63-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அட்லீ டைரக்டு செய்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னையிலேயே நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெற இருக்கிறது. இதுபற்றி படக்குழுவினர் ஒருவர் கூறியதாவது:-

``இந்த படத்துக்கு `வெறித்தனம்' என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக இணையதளங்களில் பொய்யான தகவல் பரவியிருக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நெருங்கும்போது, பெயர் சூட்டப்பட இருக்கிறது.

படத்தின் முக்கிய வில்லனாக ஜாக்கி ஷராப் நடிக்கிறார். பெரும்பகுதி படப்பிடிப்பு பரங்கிமலை, காசிமேடு, தியாகராயநகர் ஆகிய இடங்களிலேயே நடைபெற்றது. இதற்கு விஜய்தான் காரணம் ``நம் ஊர் ஆட்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கட்டும்'' என்று அவர் சொன்னதால்தான், சென்னையிலேயே படப்பிடிப்பு நடை பெற்றது.

அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக,சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், மிக பிரமாண்டமான முறையில் ஒரு கால்பந்து அரங்கம் அமைக்கப்படுகிறது. விஜய் இப்போது வெளிநாடு போய் இருக்கிறார். கனடாவில் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் படித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக விஜய் குடும்பத்துடன் லண்டன் சென்று இருக்கிறார்.

கனடாவில் இருந்து அவர் திரும்பியதும், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டு வரும் கால்பந்து அரங்க படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.''