திருமணத்துக்கு முன்பு நடிகை எமிஜாக்சன் கர்ப்பம்
எமி ஜாக்சனுக்கும் பிரான்சை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பெனாய்ட்டோவுக்கும் காதல் மலர்ந்தது.
இங்கிலாந்தை சேர்ந்த நடிகை எமிஜாக்சன் மதராசபட்டினம் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
எமி ஜாக்சனுக்கும் பிரான்சை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பெனாய்ட்டோவுக்கும் காதல் மலர்ந்தது. இவருக்கு இங்கிலாந்தில் சொந்தமாக பல நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். நெருக்கமாக இருக்கும் படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தனர்.
எமிஜாக்சனுக்கு இது 4-வது காதல் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தி நடிகர் பிரகத் பாபருடன் சுற்றினார். அதன்பிறகு ஜோ சிக்ரிக்குடன் காதலில் இருந்தார். பின்னர் 22 வயது நடிகரான ரியான் தாமசுடன் 6 மாதங்கள் சேர்ந்து வாழ்ந்து பிரிந்தார். தற்போது ஜார்ஜ் பெனாய்ட்டோவுடன் காதலில் இருக்கிறார்.
இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த நிலையில் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே எமிஜாக்சன் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். “நான் தாய்மை அடைந்துள்ள இந்த தருணத்தை வீட்டின் மாடியில் நின்று சத்தமாக சொல்ல தோன்றுகிறது. எங்கள் குழந்தையை பார்க்க காத்திருக்க முடியவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

Related Tags :
Next Story