“எனக்கு அரசியல் ஆசை வந்துள்ளது” -நடிகை சுருதிஹாசன்
எனக்கும் அரசியல் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது என்று நடிகை சுருதிஹாசன் கூறினார்.
சுருதிஹாசன் 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் விலகி இருக்கிறார். இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-
“நான் இங்கிலாந்தில் ஒரு இசை ஆல்பம் தயார் செய்யும் வேலையில் இருக்கிறேன். பாடலை நானே எழுதுகிறேன். சினிமாவில்தான் நடிக்கவில்லையே தவிர ஓய்வு எடுக்கவில்லை. இசை பணிகள் முடிந்ததும் மீண்டும் நடிப்பேன். தமிழ் படமொன்றில் நடிக்க இருக்கிறேன்.
இந்தி படமொன்றுக்கும் ஒப்பந்தமாகி உள்ளேன். 10 வருடங்கள் நடித்து விட்டேன். கதாநாயகி போட்டியில் பின் தங்கிவிடுவேன் என்ற பயம் இல்லை. இசை ஆல்பம் வேலைகளை ஆரம்பித்ததால் நடிப்பதை தள்ளி வைத்து இருக்கிறேன்.
எனது தந்தை கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகு எனக்கும் அந்த பக்கம் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இதுவரை நம்மை சுற்றி நடப்பதை கவனிக்காமல் காலம் போய்விட்டது. இப்போது ஆழமாக எல்லாம் பார்க்கிறேன். நாடாளுமன்றம் என்றால் என்ன? ராஜ்யசபை எல்லாம் தெரிந்துகொள்கிறேன். அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன். ஆனால் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதற்கு எனக்கு அனுபவமும், முதிர்ச்சியும் இல்லை. ஆனால் எனது தந்தை மாதிரி ஆட்கள் அரசியலுக்கு வருவது மிகவும் தேவை. அவருக்கு சமூக பிரச்சினைகளில் நல்ல தெளிவு இருக்கிறது. இளைஞர்கள், பெரியவர்களாக இருந்தாலும் சரி ஒரு புதிய மாற்றத்துக்காக ஓட்டுப்போட வேண்டும் என்பது எனது கருத்து.
இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.
Related Tags :
Next Story