சினிமா செய்திகள்

வசந்தபாலன் டைரக்‌ஷனில் விஷ்ணு விஷால் நடிக்கிறார் + "||" + Vishnu Vishal plays Vasanthabalan Direction

வசந்தபாலன் டைரக்‌ஷனில் விஷ்ணு விஷால் நடிக்கிறார்

வசந்தபாலன் டைரக்‌ஷனில் விஷ்ணு விஷால் நடிக்கிறார்
வசந்தபாலன் அடுத்த படத்தில், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.
‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’ ஆகிய படங்களை டைரக்டு செய்த வசந்தபாலன் இப்போது, ‘ஜெயில்’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதில், ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது.

இதையடுத்து வசந்தபாலன் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார். அதில், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.

படப்பிடிப்பை அடுத்த மாதம் (மே) தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இது, ஒரு குறுகிய கால தயாரிப்பு.