சினிமா செய்திகள்

‘ராட்சசன்’ (தெலுங்கு) படம் கைகொடுக்குமா? + "||" + Ratsasan Telugu film

‘ராட்சசன்’ (தெலுங்கு) படம் கைகொடுக்குமா?

‘ராட்சசன்’ (தெலுங்கு) படம் கைகொடுக்குமா?
‘பிரேமம்’ (மலையாள) படத்தின் மூலம் பிரபலமான கதாநாயகிகளில், அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழி பட உலகிலும் அனுபமா பரமேஸ்வரன் நடித்தார். தமிழில், ‘கொடி’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். இந்த படத்துக்குப்பின், தமிழ் பட உலகில் நிரந்தர கதாநாயகி ஆகிவிடலாம் என்று அவர் எதிர்பார்த்தார்.

அவருடைய எதிர்பார்ப்பு வெற்றி பெறவில்லை. தமிழில், புதிய பட வாய்ப்புகள் எதுவும் அவருக்கு வரவில்லை. அவர் நடித்த ‘தேஜ் ஐ லவ் யூ,’ ‘உன்னடி ஒகடே சிந்தகி,’ ‘ஹலோ குரு ப்ரேமா கோஸ்ரம்,’ ‘கிருஷ்ணார்ஜுன யுத்தம்’ ஆகிய தெலுங்கு படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் புதிய தெலுங்கு பட வாய்ப்புகள் எதுவும் அவருக்கு வரவில்லை.

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு பட உலகமும் கைவிட்ட நிலையில், விரைவில் திரைக்கு வரயிருக்கும் ‘ராட்சஷகுடு’ என்ற தெலுங்கு படத்தை ரொம்ப நம்பிக்கொண்டிருக்கிறார். அது, ‘ராட்சசன்’ என்ற தமிழ் படத்தின் ‘ரீமேக்’ ஆகும். இந்த படம் நிச்சயமாக தனக்கு கைகொடுக்கும் என்று அவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...