சினிமா செய்திகள்

இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதா? + "||" + Is Indian-2 film abandoned?

இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதா?

இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதா?
இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியான இந்தியன் படம் வசூல் குவித்தது. அதன் 2-ம் பாகத்தை இந்தியன்-2 என்ற பெயரில் தயாரிக்க ஏற்பாடுகள் நடந்தன. கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் தேர்வானார். இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.


சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை ஷங்கர் நிறுத்திவிட்டதாக கூறப்பட்டது. அவரது தோற்றத்தை ஹாலிவுட் மேக்கப் கலைஞர்களை வைத்து மாற்றி அமைத்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

அதன்பிறகு படத்தின் பட்ஜெட் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியன்-2 படத்தை கைவிட்டுவிட்டதாக தற்போது சமூக வலைத்தளத்தில் மீண்டும் தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து பட தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது அது வதந்திதான் என்று மறுத்தனர். படத்தை கைவிடவில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறினர். தேர்தல் முடிவுகள் வெளியானதும் இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“எனது திரையுலக பயணத்தில் இந்தியன்-2 கடைசி படமாக இருக்கும் என்றும் இந்த படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி விடுவேன்” என்றும் கமல்ஹாசன் ஏற்கனவே கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி
தனுஷ் நடித்துள்ள படமான ‘பட்டாஸ்’ 1,500 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாக பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
2. நடிகை தீபிகா படுகோனேவின் படத்தை புறக்கணிப்பது தவறானது - சிவசேனா சொல்கிறது
டெல்லி மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகை தீபிகா படுகோனேவின் படத்தை புறக்கணிப்பது தவறானது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.
3. அஜித்குமார் படத்தில் இலியானா?
அஜித்குமார் படத்தில் இலியானா நடிக்க உள்ளாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
4. மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயராம்
டைரக்டர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகர் ஜெயராம் நடிக்க உள்ளார்.
5. இந்தியன்-2 படத்தில் கமல் தோற்றத்தில் மீண்டும் மாற்றம்
இந்தியன்-2 படத்தில் கமல் தோற்றத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.