சினிமா செய்திகள்

வில்லன் வேடத்தில், வெங்கட் பிரபு + "||" + In the role of the villain, Venkat Prabhu

வில்லன் வேடத்தில், வெங்கட் பிரபு

வில்லன் வேடத்தில், வெங்கட் பிரபு
இயக்குனர் வெங்கட்பிரபு ஒரு படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
சினிமாவில் நடிப்பு மட்டுமல்லாமல் அதன் வியாபாரத்திலும் காலூன்றி தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நிதின் சத்யா.

“ஜருகண்டி” படத்திற்கு பிறகு தற்போது நிதின்சத்யா ஒரு புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். தனது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படமான இப்படத்தில், வைபவ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க, உடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வைபவை தெறிக்கவிடும் வில்லனாக இயக்குனர் வெங்கட்பிரபு நடிக்கிறார். இவர் வில்லனாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்காக பல நட்சத்திரங்கள் கைக்கோர்த்துள்ளது ரசிகர்களிடையே படத்தின் எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது. சஸ்பென்ஸ்-திகில் படமாக உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிநி சார்லஸ் இயக்குகிறார். தற்போது, 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.