சினிமா செய்திகள்

சோனம் கபூர் கைப்பை விலை ரூ.18 லட்சம்அதிர்ச்சியான ரசிகர்கள் + "||" + Sonam Kapoor handbags worth Rs 18 lakh

சோனம் கபூர் கைப்பை விலை ரூ.18 லட்சம்அதிர்ச்சியான ரசிகர்கள்

சோனம் கபூர் கைப்பை விலை ரூ.18 லட்சம்அதிர்ச்சியான ரசிகர்கள்
இந்தி நடிகை சோனம் கபூர் கைப்பையின் விலை ரூ.18 லட்சம் ஆகும்.
இந்தி நடிகைகள் பல லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த ஷூக்கள், கைப்பைகள், கை கெடிகாரங்களை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி ரூ.1.3 லட்சம் மதிப்பிலும், இளையமகள் குஷி ரூ.1.5 லட்சத்திலும் சமீபத்தில் ஷூக்கள் அணிந்திருந்ததை பார்த்து பலரும் வியந்தனர். இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ரூ.5 லட்சத்துக்கும் மேலான மதிப்பில் நிறைய கைப்பைகள் வைத்துள்ளார். இந்த நிலையில் பிரபல இந்தி நடிகையும், மூத்த நடிகர் அனில்கபூரின் மகளுமான சோனம் கபூர் கோட் சூட் கூலிங்கிளாஸ் அணிந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்தார்.

அவர் கையில் ஒரு கைப்பை இருந்தது. இதன் விலை ரூ.18 லட்சம் ஆகும். விலையை பார்த்து ரசிகர்கள் வியந்துபோய் சமூக வலைத்தளத்தில் அதிர்ச்சியை பதிவிட்டு வருகிறார்கள். இவர் தனுஷ் ஜோடியாக ராஞ்சனா இந்தி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. டெல்லி தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து நடித்து வருகிறார்.