சினிமா செய்திகள்

சினிமா ஆசை நிறைவேறியதா? + "||" + Kamal is the heroine in the lead role as the hero

சினிமா ஆசை நிறைவேறியதா?

சினிமா ஆசை நிறைவேறியதா?
கதாநாயகனாக ஜீ.ஜீ நடிக்க, கதாநாயகியாக கமலி அறிமுகம் ஆகிறார்
‘வாங்க படம் பார்க்கலாம்’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. இதில் கதாநாயகனாக ஜீ.ஜீ நடிக்க, கதாநாயகியாக கமலி அறிமுகம் ஆகிறார். எஸ்.கோபால் தயாரித்துள்ள இந்த படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்திருப்பவர், கே.எஸ்.நேசமானவன்.

படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், டைரக்டர் நேசமானவன் பேசும்போது, ‘‘ரியல் எஸ்டேட் தொழில் அதிபரின் தம்பிக்கு சினிமா கதாநாயகன் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த ஆசை நிறைவேறியதா, இல்லையா? என்பதே கதை’’ என்றார்.

கதாநாயகன் ஜீ.ஜீ பேசும்போது,‘‘இந்த படம் என் முதல் முயற்சி. படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம்? என்பதை புரிந்து கொண்டேன். வர்த்தக ரீதியிலான நகைச்சுவை படமாக உருவாக்கி இருக்கிறோம். இதுபோன்ற குறைந்த பட்ஜெட் படங்களுக்கு வினியோகஸ்தர்கள் உதவ வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.