சினிமா செய்திகள்

பெயர் இல்லாமல் ஓட்டுபோட்டதால் கைது நடவடிக்கை? வக்கீல்களுடன் சிவகார்த்திகேயன் ஆலோசனை + "||" + Sivakarthikeyan consultation with lawyers

பெயர் இல்லாமல் ஓட்டுபோட்டதால் கைது நடவடிக்கை? வக்கீல்களுடன் சிவகார்த்திகேயன் ஆலோசனை

பெயர் இல்லாமல் ஓட்டுபோட்டதால் கைது நடவடிக்கை? வக்கீல்களுடன் சிவகார்த்திகேயன் ஆலோசனை
தமிழகத்தில் கடந்த 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது.
தமிழகத்தில் கடந்த 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது நடிகர் சிவகார்த்திகேயன் தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட சாலிகிராமம் வாக்குச்சாவடியில் ஓட்டு போடுவதற்காக மனைவியுடன் சென்று இருந்தார். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது மனைவி பெயர் இருந்தது. சிவகார்த்திகேயன் பெயர் இல்லை.

அதன்பிறகு வளசரவாக்கம் வாக்குச்சாவடிக்கு சென்று சிவகார்த்திகேயன் ஓட்டுப்போட்டதாக கூறப்பட்டது. அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத நிலையில் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறும்போது, “சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே ஓட்டு போட்டு இருக்கிறார். அவரை எப்படி ஓட்டுபோட அனுமதித்தார்கள் என்று விளக்கம் கேட்டு இருக்கிறோம். இதில் தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே சிவகார்த்திகேயன் ஓட்டு போட்ட விவரத்தை தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்து இருக்கிறோம். ஓட்டு எண்ணிக்கையின்போது ஒரு ஓட்டில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் நிலை ஏற்பட்டால் சிவகார்த்திகேயன் அளித்த ஓட்டு கணக்கில் சேர்க்கப்படாது” என்றார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் ஓட்டு போட்டதற்காக சிவகார்த்திகேயன் மீது கைது நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது என்று தகவல் பரவி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வக்கீல்களுடன் சிவகார்த்திகேயன் ஆலோசித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ மாறுபட்ட-புதுமையான கதை
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் ‘ஹீரோ’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
2. சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி படங்கள் மோதல்!
சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த `மிஸ்டர் லோக்கல்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. வசூலும் குறைந்தது. இதனால், அவருடைய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.
3. சிவகார்த்திகேயன் படத்துக்கு எம்.ஜி.ஆர். பட ‘டைட்டில்’
‘மெரினா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு புதிய கதாநாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்.
4. அண்ணன்-தங்கை வேடங்களில் சிவகார்த்திகேயன்-ஐஸ்வர்யா ராஜேஷ்!
சிவகார்த்திகேயன் இப்போது பாண்டிராஜ் டைரக்‌ஷனில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் அண்ணனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாகவும் நடித்து வருகிறார்கள்.
5. சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் 3-வது முறையாக இணைந்தார்கள்
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் டைரக்‌ஷனில் ஏற்கனவே ‘மெரினா,’ ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களில் நடித்து இருந்தார்.