சினிமா செய்திகள்

‘பேரழகி’ ஐ.எஸ்.ஓ, படத்துக்காக60 வயது சச்சு 20 வயது ஷில்பாவாக மாறிய அதிசயம்! + "||" + 60 years old Sachu 20 year old Shilpa

‘பேரழகி’ ஐ.எஸ்.ஓ, படத்துக்காக60 வயது சச்சு 20 வயது ஷில்பாவாக மாறிய அதிசயம்!

‘பேரழகி’ ஐ.எஸ்.ஓ, படத்துக்காக60 வயது சச்சு 20 வயது ஷில்பாவாக மாறிய அதிசயம்!
நகைச்சுவை நடிகையும், மூத்த நடிகைகளில் ஒருவருமான சச்சு, ‘பேரழகி ஐ.எஸ்.ஓ.’ என்ற படத்தில் 60 வயதை தாண்டிய பாட்டி வேடத்தில் நடிக்கிறார்.
‘பேரழகி ஐ.எஸ்.ஓ.’  விஞ்ஞானப்பூர்வமான கதையம்சம் கொண்ட படம். இந்த படத்துக்காக அவர் 20 வயது பேத்தியாக மாறினார். இந்த அதிசயம் பற்றி படத்தின் தயாரிப்பாளரும், டைரக்டருமான விஜயன் சி. கூறியதாவது:-

“பேரழகி ஐ.எஸ்.ஓ.’ ஒரு சயன்ஸ் பிக்‌ஷன் படம். அதை சீரியசாக இல்லாமல் நகைச்சுவை கலந்து எடுத்துள்ளோம். இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம். ஷில்பா மஞ்சுநாத் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார். இவர், ‘காளி,’ ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங் களின் மூலம் பிரபலமானவர். ‘நீ என்ன மாயம் செய்தாய்,’ ‘மித்ரா’ ஆகிய படங்களில் நடித்த புதுமுகம் விவேக் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சச்சு, சரவண சுப்பையா, லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஷில்பா மஞ்சுநாத் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார்.

கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்கள் மூலம் ஒரு மருந்து கண்டு பிடிக்கிறார். பல வருடங்கள் கழித்து அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது.

ஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக் கொள்கிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். அந்த கதாபாத்திரத்தில் ஷில்பா நடித்து இருக்கிறார். இதனால் ஏற்படும் குழப்பங்களை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம். ஒரு ஜாலியான விஞ்ஞானப்பூர்வமான படமாக ‘பேரழகி ஐ.எஸ்.ஓ.’ இருக்கும்.”