சினிமா செய்திகள்

மாளவிகாவின் கவர்ச்சி உடையை விமர்சித்த ரசிகர்கள் + "||" + Fans criticizing Malavika's glamorous dress

மாளவிகாவின் கவர்ச்சி உடையை விமர்சித்த ரசிகர்கள்

மாளவிகாவின் கவர்ச்சி உடையை விமர்சித்த ரசிகர்கள்
நடிகைகள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அரைகுறை உடையில் இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.
நீச்சல் உடை படங்களையும் பகிர்கிறார்கள். சினிமா வாய்ப்புகளுக்காக இதுபோன்ற படங்களை அவர்கள் வெளியிடுவதாக விமர்சிக்கப்படுகிறது.

பொது நிகழ்ச்சிகள், விழாக்களிலும் கவர்ச்சி உடைகளில் பங்கேற்கின்றனர். நடிகைகளின் இந்த போக்கை சமீபத்தில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கண்டித்து இருந்தார். ரசிகர்களும் எதிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்த மாளவிகா மோகனனும் இப்போது கவர்ச்சி உடை புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

இவர் மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சமூக வலைத்தள பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படத்தை மாளவிகா மோகனன் வெளியிட்டார். இந்த படத்தை பார்த்த சிலர் அவரை கடுமையாக விமர்சித்தனர். இந்த ஆடையை அணிவதற்கு பதில் டிரஸ் போடாமலேயே இருந்திருக்கலாமே? என்றும் கேலி செய்தனர்.

இது சமூக வலைத்தளத்தில் சர்ச்சையான விவாதமானது. இதற்கு பதிலடி கொடுத்த மாளவிகா மோகனன், “ஒரு பெண் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று எனக்கு நிறைய ஆலோசனைகள் வருகின்றன. எனக்கு பிடித்த உடையை நான் அணிந்து இருக்கிறேன்” என்றார். அத்துடன் இன்னொரு கவர்ச்சி படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.