சினிமா செய்திகள்

பவன் கல்யாணை சீண்டும் ‘கல்கி’ + "||" + Pawan Kalyan's flick 'Kalki'

பவன் கல்யாணை சீண்டும் ‘கல்கி’

பவன் கல்யாணை சீண்டும் ‘கல்கி’
தமிழில் இருந்து தெலுங்கு சினிமாவிற்குச் சென்று, அங்கு தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் நடிகர் டாக்டர் ராஜசேகர்.
நடிகர் டாக்டர் ராஜசேகர் பல வெற்றிப்படங்களைக் கொடுத்திருந்தும்  இவருக்கு, இடையில் சில படங்கள் சரியாக ஓடவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு ‘பிஎஸ்வி கருட வேகா’ என்ற திரைப்படத்தில் நடித்தார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படம், டாக்டர் ராஜசேகரின் சரிந்து கிடந்த மார்க்கெட்டை மீண்டும் உயர்த்திப் பிடித்திருக்கிறது. இதையடுத்து அவரது நடிப்பில் ‘கல்கி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தை பிரசாந்த் வர்மா இயக்குகிறார். தெலுங்கு நடிகரும் தற்போது அரசியல் கட்சி தொடங்கியிருப்பவருமான பவன் கல்யாணுக்கும், டாக்டர் ராஜசேகருக்கும் அரசியல் ரீதியாக சில பிரச்சினைகள் இருந்து வருகின்றன. பவன் கல்யாண், தன்னுடைய நடிப்பில் வெளியான ‘கப்பர் சிங்’ என்ற திரைப்படத்தில் டாக்டர் ராஜசேகரை கேலி கிண்டல் செய்து ஓரிரு காட்சிகளை வைத்திருந்தார்.

அதற்கு விரைவில் வெளியாக இருக்கும் ‘கல்கி’ திரைப்படத்தில் டாக்டர் ராஜசேகர் பதிலடி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தில் டீசர் அைத உறுதி செய்வதாக இருக்கிறது.

இதனால் டாக்டர் ராஜசேகர் ரசிகர்கள் உற்சாகத்திலும், பவன் கல்யாண் ரசிகர்கள் கோபத்திலும் இருக்கிறார்களாம்.