சினிமா செய்திகள்

ஆட்டோ ஓட்டுனர்களை கவுரவப்படுத்திய பாட்ஷா + "||" + Baadshah honored auto drivers

ஆட்டோ ஓட்டுனர்களை கவுரவப்படுத்திய பாட்ஷா

ஆட்டோ ஓட்டுனர்களை கவுரவப்படுத்திய பாட்ஷா
வாகனமும் தமிழ் திரைப்படமும்...1995 -ம் ஆண்டு வெளிவந்த பாட்ஷா திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு ஆட்டோ ஓட்டுனராக நடித்திருப்பார். பஜாஜ் நிறுவனத்தின் ஆட்டோவை அந்த படத்தில் பயன்படுத்தி இருந்தனர். அவ்வளவு பெரிய உச்ச நடிகர் எளிமையான வேடமேற்று ஆட்டோ ஓட்டுனர்களுக்கே ஒரு பெருமையை ஏற்படுத்தினார். அந்த படம் வெளியான நேரத்தில் கட் அவுட்கள், பாலாபிஷேகம் என்று ரஜினியை கொண்டாடி தீர்த்தனர் ஆட்டோ ஓட்டுனர்கள். ரஜினியின் புகைப்படம் இடம் பெறாத ஆட்டோவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து ஆட்டோக்களிலும் ரஜினியின் போட்டோ இடம்பெற்றிருந்தது. பாட்ஷா வந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் இன்றளவும் ரஜினிக்கு ஆட்டோ ஓட்டுனர்கள் பலரும் தீவிர ரசிகர்களாக உள்ளனர்.