சினிமா செய்திகள்

தேர்தலில் நிற்காமல் முன்னணி பெற்ற நடிகை சன்னி லியோன் + "||" + actres sunny leone is the real winner

தேர்தலில் நிற்காமல் முன்னணி பெற்ற நடிகை சன்னி லியோன்

தேர்தலில் நிற்காமல் முன்னணி பெற்ற  நடிகை சன்னி லியோன்
தேர்தலில் நிற்காக சன்னி லியோன் முன்னணியில் இருப்பதாக செய்திவாசிப்பாளர் ஒருவர் அறிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் தற்போதைய  நிலவரப்படி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார் பாஜக வேட்பாளர் சன்னி தியோல். இதனால் அவரது வெற்றி உறுதியாகிவிட்டது.

இந்நிலையில், பிரபல செய்தி ஊடகம் நடத்திய தேர்தல் முடிவுகள் குறித்த  நேரலை நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி, சன்னி  லியோன் 7,500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதாக கூறினார்.

அதாவது குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதி நிலவரம் குறித்து அவசரமாகப் பேசிய தொகுப்பாளர் சன்னி தியோல் என்று கூறுவதற்கு பதிலாக சன்னி லியோன் என்று தவறாக கூறிவிட்டார்.

சன்னி லியோன் பிரபலம் என்பதால் இத்தகவல் காட்டுத்தீயாய் பரவியது. இதுகுறித்து ட்வீட் செய்த நடிகை சன்னி லியோன், “நான் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளேன்” என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ளார்.