சினிமா செய்திகள்

சசிகுமார்-நிக்கி கல்ராணியுடன்`ராஜவம்சம்' படத்தில், 49 நடிகர்கள் + "||" + 49 actors in the Rajam Vamsam film

சசிகுமார்-நிக்கி கல்ராணியுடன்`ராஜவம்சம்' படத்தில், 49 நடிகர்கள்

சசிகுமார்-நிக்கி கல்ராணியுடன்`ராஜவம்சம்' படத்தில், 49 நடிகர்கள்
சசிகுமார்-நிக்கி கல்ராணி ஜோடியாக நடிக்கும் படத்துக்கு, `ராஜவம்சம்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
சசிகுமார்-நிக்கி கல்ல்ராணி இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம், இது. சசிகுமாருக்கு 19-வது படம். சுந்தர் சி.யிடம் உதவி டைரக்டராக இருந்த கதிர்வேலு டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-

``இந்த படத்தில், 49 நடிகர்களை நடிக்க வைத்து இருக்கிறேன். இவ்வளவு அதிக நடிகர்களை நடிக்க வைத்து இயக்கியிருப்பது, தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை. இது, ஒரு சவாலாக இருந்தது. இதற்கு மிகப்பெரிய அனுபவம் வேண்டும். இது, ஒரு குடும்ப படமாக மட்டுமல்லாமல், தற்போது நாட்டுக்கு தேவையான ஒரு கருத்தும் படத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

இந்த உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒன்றை மறந்து, ஓடிக்கொண்டிருக்கிறோம். நாம் மறந்ததை நினைவூட்டும் படம், இது. ராதாரவி, தம்பிராமய்யா, விஜயகுமார், சதீஷ், மனோபாலா, ரமேஷ்கண்ணா, சிங்கம்புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ராஜ்கபூர், நமோ நாராயணா, சாம்ஸ், ரேகா, சுமித்ரா, நிரோஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

சாம் சி.எஸ். இசையமைக்கிறார். செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கிறார். படம் சென்னை, பொள்ளாச்சி, பாங்காக் ஆகிய இடங்களில் வளர்ந்து இருக்கிறது.''