சினிமா செய்திகள்

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மாளவிகா, ரீமாசென் புதிய புகைப்படம் + "||" + The social website in viral actress Malavika, Remasen new photo

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மாளவிகா, ரீமாசென் புதிய புகைப்படம்

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மாளவிகா, ரீமாசென் புதிய புகைப்படம்
நடிகை மாளவிகா மற்றும் ரீமாசென் ஆகியோரின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

திரையுலகில் கதாநாயகிகள் மார்க்கெட் அதிக பட்சம் 10 வருடங்கள். விதிவிலக்காக நயன்தாரா, திரிஷா என்று ஓரிரு நடிகைகள் தொடர்ந்து நடிக்கின்றனர். அவர்களையும் இளம் கதாநாயகர்கள் ஜோடிசேர்ப்பது இல்லை. தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகிகளாக இருந்த பலர் 8, 10 வருடங்களுக்கு பிறகு பட வாய்ப்புகளை இழந்து திருமணம், குழந்தைகள் என்று செட்டில் ஆகி உள்ளனர்.


அவர்களில் முக்கியமானவர்கள் ரீமா சென், மாளவிகா. 2001-ல் மின்னலே படத்தில் அறிமுகமான ரீமாசென் தூள், செல்லமே, திமிரு, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் என்று பல ஹிட் படங்களில் நடித்தார். 2011-ல் ராஜபாட்டையில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் அளவுக்கு மார்க்கெட் இறங்கியது. அதன்பிறகு ஷிவ்கரன் சிங் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

மாளவிகா 1999-ல் உன்னைத்தேடி படத்தில் அறிமுகமாகி ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, பேரழகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, குருவி என்று பல படங்களில் நடித்தார். சித்திரம் பேசுதடி படத்தில் ‘வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ பாடலுக்கு மாளவிகா ஆடிய நடனம் பரபரப்பாக பேசப்பட்டது.

2009-ல் சினிமாவுக்கு முழுக்கு போட்டார். சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ரீமா சென்னும், மாளவிகாவும் திடீரென்று சந்தித்தனர். அப்போது இருவரும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சந்தித்து பேசிய புகைப்படங்களையும் வலைத்தளத்தில் வெளியிட்டனர். அந்த படங்களை பார்த்த ரசிகர்கள் மாளவிகா எடை கூடி ஆளே மாறிவிட்டதாக வியப்பு தெரிவித்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சமூக வலைத்தளங்களில் அதிக நபர்கள் பின் தொடரும் பட்டியல் - கேப்டன் விராட் கோலி முதலிடம்
உலக அளவில் சமூக வலைத்தளங்களில், அதிகம் நபர்கள் பின் தொடரப்படும் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
2. இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? - நடிகை கஸ்தூரி விளக்கம்
இஸ்லாமிய பெண் தோற்றத்தில் இருப்பதுபோல் சமூக வலைத் தளத்தில் வைரலான புகைப்படம் குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.
3. கணவரை ‘ஷூ லேஸ்’ கட்டவைத்த நடிகை - வைரலாகும் புகைப்படம்
கணவரை ‘ஷூ லேஸ்’ கட்டவைத்த நடிகையின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
4. சமூக வலைத்தளத்தில் அவதூறு பூனம் கவுர் போலீசில் புகார்
தன்னைப் பற்றி சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பப்பட்டு வருவதாக நடிகை பூனம் கவுர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...