சினிமா செய்திகள்

சிவா இயக்கத்தில் ரஜினி? + "||" + Siva Direct Rajini?

சிவா இயக்கத்தில் ரஜினி?

சிவா இயக்கத்தில் ரஜினி?
டைரக்டர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். சந்திரமுகி படத்துக்கு பிறகு நயன்தாரா இதில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். சுனில் ஷெட்டி, பிரதீக் பாபர் வில்லன்களாக வருகிறார்கள். நிவேதா தாமஸ், யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர்.


ரஜினிகாந்த் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்பை பகுதிகளில் விறுவிறுப்பாக நடக்கிறது. படத்தை பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிப்பாரா? அல்லது தனி கட்சி தொடங்கி முழுநேர அரசியலில் குதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் டைரக்டர் சிவா சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ரஜினிகாந்தை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது ரஜினியிடம் கதை சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்று தகவல் பரவி உள்ளது. இதை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. சிவா ஏற்கனவே சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை டைரக்டு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.