சினிமா செய்திகள்

22 வயதில் கர்ப்பமா? - நடிகை அனுசித்ரா விளக்கம் + "||" + At 22 years of age, pregnant? - Actress Anu chithra interpretation

22 வயதில் கர்ப்பமா? - நடிகை அனுசித்ரா விளக்கம்

22 வயதில் கர்ப்பமா? - நடிகை அனுசித்ரா விளக்கம்
22 வயதில் கர்ப்பம் என வெளியான தகவலுக்கு நடிகை அனுசித்ரா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழில் ‘பொதுநலன் கருதி’ படத்தில் நடித்துள்ளவர் அனுசித்ரா. தற்போது மேலும் சில படங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவருக்கு 2015-ல் திருமணம் முடிந்து விட்டது. தனது சிறு வயது நண்பர் விஷ்ணு பிரசாத் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 18.

தற்போது அனுசித்ராவுக்கு 22 வயது ஆகிறது. இந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தார்கள். 22 வயதிலேயே கர்ப்பமா? என்று சிலர் விமர்சிக்கவும் செய்தனர்.

இதற்கு பதில் அளித்துள்ள அனுசித்ரா, “நான் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. இந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள அவசியம் இல்லை. இப்போது சினிமாவில்தான் எனது முழுக்கவனமும் உள்ளது. குழந்தை பெற்றுக்கொள்ள இன்னும் காலம் இருக்கிறது” என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.