சினிமா செய்திகள்

இந்திய அளவில் டிரெண்டிங் சமூக வலைத்தளத்தை அதிர வைத்த வடிவேல் ‘மீம்ஸ்’கள் + "||" + Trending at Indian level Social networking Vadivel Meams

இந்திய அளவில் டிரெண்டிங் சமூக வலைத்தளத்தை அதிர வைத்த வடிவேல் ‘மீம்ஸ்’கள்

இந்திய அளவில் டிரெண்டிங் சமூக வலைத்தளத்தை அதிர வைத்த வடிவேல் ‘மீம்ஸ்’கள்
வடிவேல் தலையில் மஞ்சள் நிற டர்பன் கட்டியுள்ள புகைப்படத்தை வெளியிட்டு தமிழில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங்.
சமூக வலைத்தளங்களில் ஏதேனும் ஒரு விஷயம் திடீரென்று வைரலாவது உண்டு. சில மாதங்களுக்கு முன்பு பிரதமருக்கு எதிராக ‘கோ பேக் மோடி’யை டிரெண்டிங் ஆக்கினார்கள். அந்த வரிசையில் இப்போது வடிவேலுவின் நகைச்சுவை காட்சியொன்று வைரலாகி உள்ளது.


பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் சுத்தியல் படத்தை பதிவிட்டு இதற்கு உங்கள் ஊரில் என்ன பெயர் என்று கேட்டு இருந்தார். அதற்கு தமிழ் இளைஞர் ஒருவர், இதன் பெயர் சுத்தியல். இதை வைத்து அடித்தால் டங் டங் என்று சத்தம் வரும். பெயிண்டிங் காண்டிராக்டர் நேசமணி தலையில் இந்த சுத்தியல் விழுந்ததால் அவர் மண்டை உடைந்தது என்று குறும்புத்தனமாக பதில் அளித்தார்.

பிரண்ட்ஸ் படத்தில் நேசமணி கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலு தலையில் சுத்தியல் விழுந்த நகைச்சுவை காட்சியை சுட்டிக்காட்டி இதனை அவர் தெரிவித்தார். இந்த பதில்தான் வலைத்தளங்களை தெறிக்கவிட்டு இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி உள்ளது.

‘பிரே பார் நேசமணி’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி உள்ளனர். அதில் நேசமணி உடல் நலனை விசாரிக்க பிரதமர் சென்னை வருகை, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நேசமணியின் சாப்பாடு செலவு ஒன்றரை கோடி ரூபாய், நேசமணி குணமடைய மண்சோறு சாப்பிடும் பெண்கள் என்றெல்லாம் மீம்ஸ்களை பரவ விட்டுள்ளனர்.

அரசியல், சினிமா, விளையாட்டு அனைத்திலும் நேசமணி தலையில் சுத்தியல் விழுந்த மீம்ஸ் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டுவிட்டரில் “எனது இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு” என்று தமிழில் பதிவிட்டு வடிவேலுக்கு மஞ்சள் நிற டர்பன் கட்டிய ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

இதுகுறித்து வடிவேலு கூறும்போது நேசமணி போன்ற கதாபாத்திரங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது ஆண்டவன் எனக்கு கொடுத்த பரிசு” என்று தெரிவித்து உள்ளார்.