சினிமா செய்திகள்

`யோகி டா' படத்தில்நேர்மையான போலீஸ் அதிகாரியாக தன்சிகா! + "||" + dhansika as an honest police officer

`யோகி டா' படத்தில்நேர்மையான போலீஸ் அதிகாரியாக தன்சிகா!

`யோகி டா' படத்தில்நேர்மையான போலீஸ் அதிகாரியாக தன்சிகா!
யோகி டா படத்தில் தன்சிகா நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
ரஜினிகாந்த் நடித்த `கபாலி' படத்தின் மூலம் பிரபலமான தன்சிகா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், அவர் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவர் நேர்மையாக இருப்பதால் ஏற்படும் விளைவுகளை கதை சித்தரிக்கிறது. தன்சிகாவுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து அவர் எப்படி வெளியே வருகிறார்? என்பதே திரைக்கதை.

இதில் சமுத்திரக்கனி, மனோபாலா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். `காஞ்சனா-3' படத்தின் வில்லன், கபீர்சிங் இந்த படத்திலும் வில்லனாக வருகிறார். தீபக் தேவ் இசையமைக்கிறார். அருண், ராஜ்குமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். கவுதம் கிருஷ்ணா டைரக்டு செய்கிறார்.

சென்னை மற்றும் கோவை நகரங்களில் படப்பிடிப்பு நடந்தது. 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது நடைபெறுகிறது.