சினிமா செய்திகள்

தமிழில், `பக்கிரி' என்ற பெயரில் வெளியாகிறதுதனுஷ் நடித்த ஆங்கில படம் + "||" + English film starring Dhanush

தமிழில், `பக்கிரி' என்ற பெயரில் வெளியாகிறதுதனுஷ் நடித்த ஆங்கில படம்

தமிழில், `பக்கிரி' என்ற பெயரில் வெளியாகிறதுதனுஷ் நடித்த ஆங்கில படம்
தனுஷ் நடித்த `எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகீர்' என்ற பெயரில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் உருவான படம் தமிழில், `பக்கிரி' என்ற பெயரில் திரைக்கு வருகிறது.
`எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகீர்' படத்தை கென் ஸ்காட் டைரக்டு செய்திருக்கிறார். இந்தியா முழுவதும் சஷிகாந்த் வெளியிடுகிறார். படத்தை பற்றி அவர் கூறும்போது, ``இந்த படத்தை தமிழ் ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். பல்வேறு சர்வதேச அங்கீகாரங்களை பெற்ற இந்த படத்தில் தனுஷ் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்து இருக்கிறார். இது, தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்'' என்றார்.

டைரக்டர் கென் ஸ்காட் கூறும்போது, ``மும்பையில் வசிக்கும் ஒரு பக்கத்து வீட்டு சிறுவன் தன்னை அறியும் நோக்கில், ஐரோப்பாவை சுற்றி வந்த ஒரு எச்சரிக்கை கதை. தனுஷ், மிக சிறந்த நடிகர். அவருடைய நகைச்சுவை நடிப்பு, ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்து இருக்கிறது'' என்றார்.