சினிமா செய்திகள்

உடல் மெலிந்த புகைப்படத்தை வெளியிட்டகீர்த்தி சுரேசை விமர்சித்த ரசிகர்கள் + "||" + Body Slim Photo Fans criticized Keerthi Suresh

உடல் மெலிந்த புகைப்படத்தை வெளியிட்டகீர்த்தி சுரேசை விமர்சித்த ரசிகர்கள்

உடல் மெலிந்த புகைப்படத்தை வெளியிட்டகீர்த்தி சுரேசை விமர்சித்த ரசிகர்கள்
உடல் மெலிந்த தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
டல் மெலிந்த தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கடந்த வருடம் மட்டும் இவர் நடிப்பில் 7 படங்கள் திரைக்கு வந்தன. மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வேடத்தில் நடித்த பிறகு அவருக்கு மேலும் பட வாய்ப்புகள் குவிகின்றன. ஆனாலும் தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி முடித்து விட்டு எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் உடல் மெலிந்து காணப்படுகிறார். அந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் அழகாக இருந்த தோற்றத்தை ஒல்லியாக்கி அலங்கோலமாக்கி விட்டீர்களே? என்று விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகிறார்கள்

தெலுங்கில் நரேந்திரநாத் இயக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். நாகேஷ் குக்கநூர் இயக்கும் இன்னொரு படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் விளையாட்டை மையமாக வைத்து தயராகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் விளையாட்டு வீராங்கனையாக நடிக்கிறார். பதாய் ஹோ இந்தி படத்தை இயக்கி பிரபலமான அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கும் புதிய இந்தி படத்திலும் நடிக்கிறார். இதில் அஜய்தேவ்கானுக்கு ஜோடியாக வருகிறார்.

இந்த 3 படங்களுக்காக அவர் உடல் மெலிந்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...