சினிமா செய்திகள்

“எனக்கு நடிகை என்ற கர்வம் இல்லை” - தமன்னா + "||" + "I'm actress There is no pride "- Tamanna

“எனக்கு நடிகை என்ற கர்வம் இல்லை” - தமன்னா

“எனக்கு நடிகை என்ற கர்வம் இல்லை” - தமன்னா
தமன்னா நடித்துள்ள ‘தேவி-2’ படம் திரைக்கு வந்துள்ளது. தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி, தட் இஸ் மகாலட்சுமி படங்களில் நடித்து வருகிறார்.
மன்னா நடித்துள்ள ‘தேவி-2’ படம் திரைக்கு வந்துள்ளது. தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி, தட் இஸ் மகாலட்சுமி படங்களில் நடித்து வருகிறார். தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

“நான் 13 வருடங்களாக நடிக்கிறேன். எப்போதும் என்னை ஒரு நட்சத்திரமாக கருதியது இல்லை. முதல் இடத்தில் இருக்கிறேனா? இரண்டாவது இடத்தில் இருக்கிறேனா என்று சிந்தித்ததும் இல்லை. சினிமாவில் போட்டி அதிகம். வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. திறமையை காட்டினால் வாய்ப்புக்கான கதவுகள் திறந்து கொண்டே இருக்கும். இப்போது கதாநாயகிகள் மார்க்கெட் கொஞ்ச காலம்தான் இருக்கும் என்ற நிலைமை மாறிவிட்டது. அவர்களுக்கு நடிப்பு திறமை இருந்தால் மார்க்கெட் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நீடிக்கும். காஜல் அகர்வாலும் நானும் ஒரே காலத்தில் சினிமாவுக்கு வந்தவர்கள். எங்கள் இருவருக்கும் போட்டு உள்ளது என்று பேசுகிறார்கள். அவருக்கேற்ற கதைகள் அவருக்கு வருகிறது. எனக்கேற்ற கதைகளுக்கு என்னை தேர்வு செய்கிறார்கள். இதே மாதிரிதான் சினிமாவில் உள்ள ஒவ்வொருவருக்குமான இடம் அப்படியே இருக்கிறது. நான் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள எப்போதுமே ஆர்வமாக இருப்பேன். நடிகை என்ற கர்வம் எனக்கு வந்தது இல்லை. என் கால்கள் பூமியில்தான் இருக்கும். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருக்கிறோம் என்று வானத்தில் பறப்பது மாதிரி பந்தாவெல்லாம் காட்ட மாட்டேன்”

இவ்வாறு தமன்னா கூறினார்.