கிராமத்து காதலுடன் 25 நாட்களில் முடிவடைந்த படம்


கிராமத்து காதலுடன் 25 நாட்களில் முடிவடைந்த படம்
x
தினத்தந்தி 4 Jun 2019 11:37 AM GMT (Updated: 4 Jun 2019 11:37 AM GMT)

“தெருத்தெருவாக சென்று ஐஸ் வியாபாரம் செய்யும் ஒரு இளைஞருக்கும், ஒரு கிராமத்து பெண்ணுக்கும் நட்பு ஏற்படுகிறது.

கிராமத்து  பெண் செல்லமாக வளர்த்து வரும் ஆட்டுக்குட்டியை, ஐஸ் வியாபாரியான இளைஞன் காப்பாற்றுகிறான். இருவருக்கும் இடையே நட்பு ஏற்படுவதற்கு இதுவே காரணமாகிறது.

இவர்களின் நட்பை ஊரே தப்பாக பேசுகிறது. அதுவே இந்த ஜோடிக்கு இடையே காதல் உணர்வை தூண்டுகிறது. இவர்களின் காதலால் ஏற்படும் விளைவுகளை சொல்வதே ‘கருப்பு ஆடு’ படத்தின் கதை” என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் விஜய்மோகன்.

படத்தை பற்றி அவர் மேலும் கூறியதாவது:-

“ஐஸ் வியாபாரம் செய்யும் இளைஞராக மகேஷ் நடிக்க, ‘நண்பர்கள் நற்பணி மன்றம்’ புகழ் அக்‌ஷிதா கதாநாயகியாக நடித்து இருக்கிறார். பிரபாதீஷ் சாம்ஸ் தயாரித்துள்ளார். மதுரை சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பை நடத்தினோம். 25 நாட்களில் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.

படத்தில், காதலுடன் சமூக விழிப்புணர்வை சொல்கிற ஒரு முக்கியமான விஷயம் இடம்பெறுகிறது. அது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவைப்படுவதாக இருக்கும்.

படத்துக்கு தணிக்கை குழுவினர், ‘யு’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். படத்தை இம்மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.”

Next Story