சினிமா செய்திகள்

ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க விரும்பும் தமன்னா + "||" + Tamanna who wants to play the role of Sridevi

ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க விரும்பும் தமன்னா

ஸ்ரீதேவி வேடத்தில்  நடிக்க விரும்பும் தமன்னா
நடிகர்-நடிகைகள் வாழ்க்கை படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. ஏற்கனவே சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து வித்யாபாலன் நடிப்பில் வெளியான ‘தி டர்டி பிக்சர்’ இந்தி படம் நல்ல வசூல் பார்த்தது.
சஞ்சய்தத் வாழ்க்கை படமும் நன்றாக ஓடியது. கீர்த்தி சுரேஷ் நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான சாவித்திரியின் வாழ்க்கை படத்துக்கும் வரவேற்பு கிடைத்தது. 

அடுத்து நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. தமிழ் படங்களில் நடித்து இந்தி பட தயாரிப்பாளர் போனிகபூரை மணந்து மும்பையில் குடியேறிய ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என்று 2 மகள்கள் உள்ளனர். கடந்த வருடம் துபாயில் திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க சென்ற ஸ்ரீதேவி அங்குள்ள குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார். 

அவரது வாழ்க்கையை படமாக்க போனிகபூர் தயாராகி வருகிறார். ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடக்கிறது. இந்த நிலையில் மும்பையில் பேட்டி அளித்த தமன்னா ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘ஸ்ரீதேவி வாழ்க்கையை படமாக எடுத்தால் அவரது வேடத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். ஸ்ரீதேவியாக நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. சிறுவயதில் இருந்தே எனக்கு ஸ்ரீதேவி பிடித்த நடிகை’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. 13 வருடங்கள் கதாநாயகியாக நீடிப்பது மகிழ்ச்சி - தமன்னா
தமன்னா நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி, பெட்ரோமாக்ஸ், ஆக்‌ஷன் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. சினிமா வாழ்க்கை குறித்து அவர் கூறியதாவது:-
2. தமன்னாவின் அழகு ரகசியம்
நடிகை தமன்னா தனது அழகு ரகசியம் குறித்து தெரிவித்துள்ளார்.
3. ‘காதல்’ என்றதும் கடுப்பான நாயகி!
தமிழ், தெலுங்கு என 2 மொழி படங்களிலும் பிரபல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்திருப்பவர், தமன்னா.
4. நடிக்க வராவிட்டால், டாக்டர்!
தென்னிந்திய திரையுலகில் உள்ள முக்கிய கதாநாயகிகளில் ஒருவர், தமன்னா. இவர் ஏறக்குறைய எல்லா பிரபல கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார்.
5. “படங்கள் ரசிகர்களை அழவைக்க கூடாது” நடிகை தமன்னா பேட்டி
தமன்னா நடித்த ‘தேவி-2’ படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. மேலும் 3 தெலுங்கு படங்களிலும், ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார்.