சினிமா செய்திகள்

ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது ஏன்?தமன்னா விளக்கம் + "||" + Why dance to a song? Tamanna interpretation

ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது ஏன்?தமன்னா விளக்கம்

ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது ஏன்?தமன்னா விளக்கம்
திரையுலகில் கதாநாயகர்களை விட, கதாநாயகிகள் மத்தியில் கடும் போட்டி இருந்து வருகிறது.
போட்டிகள் அதிகமாக இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி, ‘நம்பர்-1’ இடத்தில் நயன்தாரா இருந்து வருகிறார். இரண்டாவது இடத்துக்கான கதாநாயகிகள் அடிக்கடி மாறி வருகிறார்கள். இவர்களில் தமன்னாவும் ஒருவர். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சிரஞ்சீவி நடித்து வரும் ‘சாயிரா நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரே ஒரு பாடலுக்கு தமன்னா நடனம் ஆடுகிறார். வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். தமன்னா ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது, அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதொடர்பாக தமன்னா கூறும்போது, “சிரஞ்சீவி கேட்டுக்கொண்டதால்தான் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன். இதற்காக எனக்கு எந்த வருத்தமும் இல்லை. வேறு எந்த ஒரு கதாநாயகியையும் தேர்வு செய்யாமல் என்னை அந்த பாடலுக்கு தேர்வு செய்ததற்காக பெருமைப்படுகிறேன்” என்றார்.