சினிமா செய்திகள்

“அரசியலுக்கு வர திட்டமா?” காஜல் அகர்வால் விளக்கம் + "||" + "I plan to come to politics?" Kajal Agarwal Description

“அரசியலுக்கு வர திட்டமா?” காஜல் அகர்வால் விளக்கம்

“அரசியலுக்கு வர திட்டமா?” காஜல் அகர்வால் விளக்கம்
காஜல் அகர்வால் தமிழில் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’, ‘கோமாளி’ படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. அடுத்து கமல்ஹாசன் ஜோடியாக, ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார்.
உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கம் குறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

“உடற்பயிற்சி செய்யாமல் என்னால் இருக்க முடியாது. காலையில் எழுந்ததும் அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்வேன். அதன்பிறகு உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியும், உற்சாகமும் ஏற்படும். 3 நாட்கள் யோகா செய்வேன். தொடர்ச்சியாக 150 தடவை சூரிய நமஸ்காரம் செய்வேன். நீச்சல் பயிற்சியும் விரும்பி செய்வேன்.

உணவு விஷயத்தில் காலை சிற்றுண்டியாக ஓட்ஸ், பிரட், மதிய உணவுக்கு சாதம், காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவேன். இரவு சாப்பாட்டிலும் காய்கறிகள் இருக்கும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கலாமே என்று கேட்கிறார்கள்.

எனது சக நடிகைகள் அப்படி நடிக்கிறார்கள் என்பதற்காக நான் நடிக்க மாட்டேன். நடிப்பில் மற்ற நடிகைகளுடன் என்னை ஒப்பிட்டு பேசுவது பிடிக்காது. எனக்கு வரும் பட வாய்ப்புகளில் எது சிறந்த கதை என்று தோன்றுகிறதோ அதை தேர்வு செய்வேன்.

எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்கிறார்கள். எனக்கு அரசியல் தெரியாது. அரசியலுக்கு வரும் எண்ணமும் இல்லை. இப்போது எனது கவனம் முழுவதும் சினிமாவில்தான் உள்ளது. சினிமா தொழில் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. எதிர்காலம் பற்றி இப்போது யோசிக்கவில்லை.”

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. விலங்குகளை நேசிக்கும் காஜல் அகர்வால்
கமல்ஹாசனுடன் இந்தியன்-2 படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு இந்தி படமொன்றில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
2. வெப் தொடருக்கு மாறிய காஜல் அகர்வால்
நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். பிரசன்னா வெப் தொடரில் நடித்துள்ளார். பிரியாமணி பேமிலிமேன் தொடரிலும் நித்யாமேனன் பிரீத் தொடரிலும் நடிக்கின்றனர்.
3. காதலில் சிக்கிய காஜல் அகர்வால்!
காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழி படங்களில் நடித்து வருகிறார்.
4. ‘‘50 படங்களில் நடித்தது பெருமை’’ - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு பாரிஸ் பாரிஸ், கோமாளி ஆகிய 2 தமிழ் படங்கள் கைவசம் உள்ளன. கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்–2 படத்திலும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
5. பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சிக்கு மாறிய காஜல் அகர்வால்
விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி உள்பட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபல நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால்.