சினிமா செய்திகள்

“அஞ்சலியை தவிர வேறு கதாநாயகியை நினைத்து பார்க்க முடியாது” படவிழாவில், விஜய் சேதுபதி பேச்சு + "||" + "Can not think of a heroine other than Anjali" At the festival, Vijay Sethupathi talks

“அஞ்சலியை தவிர வேறு கதாநாயகியை நினைத்து பார்க்க முடியாது” படவிழாவில், விஜய் சேதுபதி பேச்சு

“அஞ்சலியை தவிர வேறு கதாநாயகியை நினைத்து பார்க்க முடியாது” படவிழாவில், விஜய் சேதுபதி பேச்சு
விஜய் சேதுபதி-அஞ்சலி ஜோடியாக நடித்துள்ள படம், ‘சிந்துபாத்’. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் நடித்து இருக்கிறார்.
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை டைரக்டு செய்த அருண்குமார் இயக்கியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். கே.ராஜராஜன், ஷான் சுதர்சன் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.

படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

“டைரக்டர் அருண்குமாரின் தனி சிறப்பு என்னவென்றால் கதாநாயகனை மிக மிக நல்லவனாகவும், கதாநாயகியை கண்ணியமானவளாகவும், அழகுணர்ச்சி மிக்கவளாகவும், இயல்பானவளாகவும் வடிவமைப்பார். அதேபோல் வாழ்க்கையில் இடம் பெறக்கூடிய சின்ன சின்ன அழகான சம்பவங்களை ரசித்து, அதனை நேர்த்தியாக காட்சிப்படுத்தக்கூடிய திறமைசாலியும் கூட. அழகை நன்றாக ரசிக்கக் கூடியவர். சினிமாவில் தொடங்கிய அவருடைய நட்பு, பிறகு என்னுடைய குடும்ப நண்பர் ஆனார். அதனால்தான் என் மகன் சூர்யாவை இந்த படத்தில் நடிக்க அனுமதித்தேன்.

“இது, ஒரு கணவன்-மனைவியை பற்றிய உணர்ச்சிகரமான படம். ஒருவனின் மனைவியை ஒரு கும்பல் கடத்தி சென்று விடுகிறது. கடல் கடந்து ஒரு இடத்தில் அவளை சிறை வைக்கிறது. அந்த மனைவியை கணவன் கஷ்டப்பட்டு, போராடி எப்படி மீட்கிறார்? என்பதுதான் கதை. படத்தில் கதாநாயகனுக்கு காது சற்று மந்தம். உரத்துப் பேசினால்தான் கேட்கும். இது, ஒரு சுவாரசியமான அம்சம்.

அஞ்சலி இயல்பாகவே சத்தமாக பேசக்கூடிய கதாபாத்திரம். பொருத்தமாக இருந்தார்.

அவரை தவிர வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்தில் நினைத்து பார்க்க முடியாது.”

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளம்?
அட்லி இயக்கத்தில் விஜய் தந்தை, மகனாக இரு வேடங்களில் நடித்துள்ள ‘பிகில்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்துள்ளனர்.
2. விஜய் சேதுபதி, நயன்தாராவின் சரித்திர படம் டிரெய்லர்
விஜய் சேதுபதி, நயன்தாராவின் சரித்திர படம் டிரெய்லர்
3. காஷ்மீர் விவகாரம்: மத்திய அரசின் முடிவுக்கு எதிராக விஜய் சேதுபதி கருத்து
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை விஜய் சேதுபதி சாடியுள்ளார்.
4. விஜய் சேதுபதிக்கு பிடித்த பாடல்!
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, இளையராஜாவின் தீவிர ரசிகர்.
5. ஓசையில்லாமல், விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி ஓசையில்லாமல் சமூக சேவைகளில் ஈடுபடுகிறார்.