சினிமா செய்திகள்

விக்ராந்த்-அர்த்தனா பினு ஜோடியுடன்‘வெண்ணிலா கபடி குழு-2’ + "||" + vennila kabadi kuzhu 2

விக்ராந்த்-அர்த்தனா பினு ஜோடியுடன்‘வெண்ணிலா கபடி குழு-2’

விக்ராந்த்-அர்த்தனா பினு ஜோடியுடன்‘வெண்ணிலா கபடி குழு-2’
விக்ராந்த்-அர்த்தனா பினு ஜோடியுடன் ‘வெண்ணிலா கபடி குழு-2’ படம் தயாராகி இருக்கிறது.
கபடி போட்டியை கருவாக வைத்து, ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படம் 2009-ம் ஆண்டில் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் மூலம் சுசீந்திரன் டைரக்டராக அறிமுகமானார். அவருடன் கதாநாயகனாக விஷ்ணு விஷால், நகைச்சுவை நடிகராக பரோட்டா சூரி ஆகியோரும் அறிமுக மானார்கள்.

இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘வெண்ணிலா கபடி குழு-2’ படம் தயாராகி இருக்கிறது. இதில் விக்ராந்த்-அர்த்தனா பினு ஜோடியுடன் பசுபதி, பரோட்டா சூரி, கிஷோர், அப்புக்குட்டி, ரவிமரியா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். சுசீந்திரன் மூலக்கதையை எழுத, செல்வசேகரன் டைரக்டு செய் திருக்கிறார். படத்தை பற்றி இவர் சொல்கிறார்:-

இந்த படத்தில், ‘‘அனைவரும் மெய்சிலிர்க்கும் வகையில் கபடி விளையாட்டை மிக சிறப்பாக படமாக்கி இருக்கிறோம். 1987-ம் ஆண்டில் கிராமங்களில் மிக விமரிசையாக கபடி விளையாட்டு போட்டியை திருவிழா போல் கொண்டாடுவதை அப்படியே படமாக்கி இருக்கிறோம். பூங்காவனம் ஆனந்த் தயாரித்துள்ள இந்த படத்தை அலெக்சாண்டர் வெளியிடுகிறார்.

‘வெண்ணிலா கபடி குழு-2’ படம் அனைத்து தரப்பினருக்கும் நல்ல விருந்தாக அமையும்.’’