சினிமா செய்திகள்

காதலித்து ஏமாற்றி விட்டார் : நடிகை மீது நடிகர் புகார் + "||" + He fell in love and cheated : Actor is complains to the actress

காதலித்து ஏமாற்றி விட்டார் : நடிகை மீது நடிகர் புகார்

காதலித்து ஏமாற்றி விட்டார் : நடிகை மீது நடிகர் புகார்
இந்தி டி.வி. தொடர்களில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் சிரிஷ்டி ரோட். இவரும் டி.வி. நடிகர் மனிஷ் நாக்தேவும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
 இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொண்டார்கள். தற்போது காதல் முறிந்து இருவரும் பிரிந்து விட்டனர். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதல் முறிவுக்கான காரணம் குறித்து மனிஷ் கூறியிருப்பதாவது:-

பெண்களைப்போல் ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளது. காதலித்து மோசம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. அடுத்தவர்கள் காதலை சுயநலத்துக்காக பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். காரணம் அது மற்றவர்களை காயப்படுத்துகிறது. தங்கள் வளர்ச்சிக்காக காதலை சிலர் பயன்படுத்துகின்றனர்.

அவர்களுக்கு தங்கள் வேலையும், உறவுகளும் மட்டுமே முக்கியம். நான்கு ஆண்டுகள் காதலித்துவிட்டு போன் செய்து காதலை முறித்துக்கொள்வதாக கூறினார். இதுகுறித்து நேரில் சந்தித்து பேசலாம் என்று அழைத்தேன். உடனே அவர் நான் எனது தொழிலில் உச்சத்தில் இருக்கிறேன். எனவே இனிமேலும் காதலிக்க விரும்பவில்லை. இனிமேல் பேசுவதற்கும் எதுவும் இல்லை என்று கூறிவிட்டார்.

அதை கேட்டு நான் அதிர்ச்சியானேன். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு காதலை முறித்துக்கொண்டார். அதன்பிறகு என்னிடம் பேசவே இல்லை. அவரது தொழில் வளர்ச்சிக்காக என் காதலை பயன்படுத்தி ஏமாற்றிவிட்டார்.

இவ்வாறு மனிஷ் கூறியுள்ளார்.