சினிமா செய்திகள்

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வித்யாபாலனுக்கு எதிர்ப்பு + "||" + Glamorous photo released Opposition to VidyaBalan

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வித்யாபாலனுக்கு எதிர்ப்பு

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வித்யாபாலனுக்கு எதிர்ப்பு
இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான 'த டர்டி பிக்சர்' படத்தில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்து பிரபலமானார்.
'த டர்டி பிக்சர்' படத்தில் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. வேறு மொழிகளிலும் த டர்டி பிக்சர் ரீமேக் செய்யப்பட்டது.

கஹானி படத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கும் கணவனை கொலை செய்யும் பெண்ணாக நடித்து இருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கில் நயன்தாரா நடிப்பில் ரீமேக் செய்து வெளியிடப்பட்டது. சமீபத்தில் திரைக்கு வந்த என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையில் என்.டி.ராமராவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

தற்போது தமிழில் தயாராகும் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அனைத்து படங்களிலும் குடும்ப பாங்கான வேடங்களிலேயே நடித்து இருந்தார். பொது நிகழ்ச்சிகளில் மாடர்ன் உடைகள் அணிவதை தவிர்த்தார்.

இந்த நிலையில் பாலி தீவுக்கு சென்றுள்ள வித்யாபாலன் கடற்கரையில் குளிக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த படம் வைரலாகி வருகிறது. எப்போதும் புடவையில் வித்யாபாலனை பார்த்த ரசிகர்களுக்கு இந்த கவர்ச்சி புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடலாமா? இந்த வயதில் இப்படி செய்யலாமா? என்றெல்லாம் வலைத்தளத்தில் கண்டித்து வருகிறார்கள்.