சினிமா செய்திகள்

கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் தேர்வு + "||" + Vijay Sethupathi's Super Deluxe movie is selected to be screened at the International Film Festival of Korea

கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் தேர்வு

கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் தேர்வு
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
 விஜய்சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் இதில் நடித்து இருந்தார். இந்த வேடத்துக்காக பல மணிநேரம் மேக்கப் போட்டு நடித்தார். அவரது தோற்றத்துக்கு பாராட்டுக்கள் குவிந்தன. திருநங்கை குழந்தையை கடத்துவதுபோல் படத்தில் இடம்பெற்ற காட்சிக்கு எதிர்ப்புகளும் கிளம்பின. படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராட்டமும் நடந்தது.

சூப்பர் டீலக்ஸ் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த நிலையில் சூப்பர் டீலக்ஸ் படம் வருகிற 27-ந்தேதி முதல் ஜூலை 7-ந்தேதி வரை கொரியாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. வேர்ல்டு பெண்டாஸ்டிக் ப்ளூ பிரிவில் இந்த படத்தை திரையிடுகின்றனர். மேலும் இந்த திரைப்பட விழாவில் கல்லிபாய், அந்தாதுன் ஆகிய பிற இந்திய மொழி படங்களும் திரையிடப்படுகின்றன. ஏற்கனவே கனடா நாட்டின் மாண்ட்ரீல் நகரில் ஜூலை 11-ந்தேதி முதல் ஆகஸ்டு 1-ந்தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் சூப்பர் டீலக்ஸ் தேர்வாகி உள்ளது.