சினிமா செய்திகள்

60-வது படத்தில் புதிய தோற்றத்தில் அஜித்குமார் + "||" + Ajith Kumar in a new look in the 60th movie

60-வது படத்தில் புதிய தோற்றத்தில் அஜித்குமார்

60-வது படத்தில் புதிய தோற்றத்தில் அஜித்குமார்
60-வது படத்தில் புதிய தோற்றத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்க உள்ளார்.

அஜித்குமார் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகி உள்ளது. இதில் வித்யாபாலன் ஜோடியாக வருகிறார். வினோத் டைரக்டு செய்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீரிக்கார்டிங் பணிகள் நடக்கின்றன. ஆகஸ்டு மாதம் திரைக்கு வருகிறது. இது அஜித்துக்கு 59-வது படமாகும் அடுத்து 60-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படமும் வினோத் இயக்க போனிகபூர் தயாரிப்பில் உருவாகிறது. இதில் ரசிகர்கள் விரும்பும் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார் என்று போனிகபூர் கூறியுள்ளார்.

கார்பந்தய வீரராக நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. முந்தைய விவேகம், விஸ்வாசம் படங்களில் அஜித் தாடி மீசையுடன் நடித்து இருந்தார். ஆனால் புதிய படத்தில் தாடி மீசை இல்லாமல் நடிப்பதாக கூறப்படுகிறது. அஜித் காரில் ஏறும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதில் தாடி, மீசை இல்லாமல் இருக்கிறார். தலைமுடியையும் குறைத்துள்ளார்.

புதிய படத்தில் இதே தோற்றத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கதாநாயகி தேர்வு நடக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் திரைக்கு வருகிறது.