சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி-ஐஸ்வர்யா ராஜேஷ் 4-வது முறையாக ஜோடி சேருகிறார்கள் + "||" + Vijay Sethupathi-Aishwarya Rajesh is teaming up for the 4th time

விஜய் சேதுபதி-ஐஸ்வர்யா ராஜேஷ் 4-வது முறையாக ஜோடி சேருகிறார்கள்

விஜய் சேதுபதி-ஐஸ்வர்யா ராஜேஷ் 4-வது முறையாக ஜோடி சேருகிறார்கள்
விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேசும் க/பெ.ரணசிங்கம் படத்தில் 4-வது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள்.
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியும், தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேசும் ஏற்கனவே ‘பண்ணையாரும் பத்மினியும்,’  ‘தர்மதுரை,’ ‘ரம்மி’ ஆகிய படங்களில் இணைந்து நடித்தார்கள். இந்த ஜோடி, 4-வது முறையாக மீண்டும் ஒரு புதிய படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் பெயர், ‘க/பெ.ரணசிங்கம்.’ இதில், ரணசிங்கமாக விஜய் சேதுபதி நடிக்க, இவருக்கு ஜோடியாக அரியநாச்சி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, யோகி பாபு,  வேல.ராமமூர்த்தி, ‘பூ’ராம் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜீ.வி.பிரகாஷ்குமாரின் தங்கை பவானி, முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

பி.விருமாண்டி கதை-திரைக்கதை எழுதி டைரக்டராக அறிமுகமாகிறார். இவர், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த பெரிய கருப்பு தேவரின் மகன். டைரக்டர் செல்வாவிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த இவர், ‘அறம்’ உள்பட சில படங்களில் இணை-துணை இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார்.

‘அடங்காதே’ படத்தின் டைரக்டர் சண்முகம் முத்துசாமி வசனம் எழுதி யிருக்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். கே.ஜே.ராஜேஷ் தயாரிக் கிறார். படப்பிடிப்பு ராமநாத புரத்தில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. சென்னை, ஐதராபாத், துபாய் ஆகிய இடங்களில் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.