சினிமா செய்திகள்

விஜய் படத்தின் 2 லுக் போஸ்டர் வெளியீடு + "||" + 2 Look Poster Release of Vijay Film

விஜய் படத்தின் 2 லுக் போஸ்டர் வெளியீடு

விஜய் படத்தின் 2 லுக் போஸ்டர் வெளியீடு
நடிகர் விஜய்-ன் ‘பிகில்’ திரைப்படத்தின் 2 லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 63-வது படத்தின் பெயர் "பிகில்" என வைக்கப்பட்டுள்ளது. இன்று நடிகர் விஜய்-ன் பிறந்தநாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் "பிகில்" திரைப்படத்தில், கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், கதிர், ரெபா மானிகா, ஆனந்தராஜ், தேவதர்ஷினி ஆகியோரும் உள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள இந்த ‘பிகில்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. படத்தில் தந்தை, மகன் என 2 கதாபாத்திரங்களில் விஜய் மிரட்டுகிறார். இந்த போஸ்டர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் படத்தின் 2-வது லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.