சினிமா செய்திகள்

தமிழ் படத்தில் அறிமுகமாகும் நிக்கி கல்ராணி சகோதரி + "||" + Nicky galrani Sister debut in Tamil film

தமிழ் படத்தில் அறிமுகமாகும் நிக்கி கல்ராணி சகோதரி

தமிழ் படத்தில் அறிமுகமாகும் நிக்கி கல்ராணி சகோதரி
நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி தமிழ் படம் ஒன்றில் அறிமுகமாக உள்ளார்.

தமிழில் டார்லிங், யாகாவாராயினும் நாகாக்க, கடவுள் இருக்கான் குமாரு, மரகத நாணயம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு-2, கீ உள்பட பல முக்கிய படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. தற்போது இவரது மூத்த சகோதரி சஞ்சனா கல்ராணியும் தமிழ் படத்தில் அறிமுகமாகிறார்.

அருண்விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தில் சஞ்சனாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சஞ்சனா ஏற்கனவே தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார். பாக்ஸர் படம் மூலம் இப்போது தமிழுக்கு வருகிறார். இதில் சஞ்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு படத்தில் சண்டை காட்சிகளும் உள்ளன. குத்துச்சண்டையும் போடுகிறார்.

சுவர்ண கட்கம் என்ற டி.வி. தொடரில் சஞ்சனாவின் நடிப்பை பார்த்து வியந்து பாக்ஸர் படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். சஞ்சனா குதிரை சவாரி பயிற்சி பெற்றவர். இந்த படத்தில் அருண் விஜய் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இதற்காக அவர் வெளிநாட்டில் குத்துச்சண்டை பயிற்சி எடுத்து வருகிறார்.

இதில் கதாநாயகியாக இறுதிசுற்று படம் மூலம் பிரபலமான ரித்திகா சிங் நடிக்கிறார். விளையாட்டு செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளராக அவர் வருகிறார். இந்த படத்தை விவேக் இயக்குகிறார்.