சினிமா செய்திகள்

நடிகைகளின் குட்டை உடையால் பாலியல் குற்றங்களா? -ஸ்ரீரெட்டி + "||" + Sexual offenses? -Sree Reddy

நடிகைகளின் குட்டை உடையால் பாலியல் குற்றங்களா? -ஸ்ரீரெட்டி

நடிகைகளின் குட்டை உடையால் பாலியல் குற்றங்களா? -ஸ்ரீரெட்டி
தெலுங்கானா மாநிலத்தில் 9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவத்தை நடிகை ஸ்ரீரெட்டி கடுமையாக கண்டித்துள்ளார்.
சினிமா துறையில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கானா மாநிலத்தில் 9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சி அளித்தது. இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த காமுகர்களுக்கு பயம் வரும். சினிமாவில் குட்டை உடைகள் அணியும் நடிகைகளை எல்லோரும் விமர்சிக்கிறார்கள்.

நடிகைகள் குட்டை உடை அணிந்து ஆண்கள் உணர்வுகளை தூண்டிவிட்டு அவர்கள் மனதை கெடுக்கின்றனர் என்றும், அதனால்தான் பாலியல் குற்றங்கள் நடக்கின்றன என்றும் ஆவேசப்படுகிறார்கள். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு நடிகைகள் குட்டை உடைகள் அணிவதுதான் காரணம் என்று பேசி சினிமாவை சாடுகின்றனர்.

ஆனால் இந்த 9 மாத குழந்தை அவனுக்கு என்ன உணர்வை தூண்டி இருக்கும். குழந்தை அணிந்த உடையில் என்ன குறை இருந்தது. அவனுக்கு எப்படி செக்ஸ் ஆசை ஏற்பட்டது. நடிகைகளை குறை சொல்பவர்கள் இந்த அநீதிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள். பாலியல் பலாத்காரம் செய்பவர்களை நடுரோட்டில் நிறுத்தி அரசு சுட்டுத்தள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் பெண்களும், குழந்தைகளும் சமூகத்தில் பாதுகாப்பாக வாழ முடியும்.”

இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கவர்ச்சி படத்தை வெளியிட்டு: சமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி
நடிகர்கள் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பட உலகை அதிர வைத்த ஸ்ரீரெட்டி ஐதராபாத்தில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார்.
2. கீர்த்தி சுரேசை சீண்டிய ஸ்ரீரெட்டி
நடிகை கீர்த்தி சுரேசை ஸ்ரீரெட்டி சீண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. திருமணம் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சை கருத்து
தனது திருமணம் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சை கருத்தினை தெரிவித்துள்ளார்.
4. அரசியலுக்கு வரும் ஸ்ரீரெட்டி
நடிகை ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.