சினிமா செய்திகள்

அப்பா வேடத்துக்கு ‘பிகில்’ மகன் வேடத்துக்கு ‘மைக்கேல்’ + "||" + For the role of father, 'Bigil' For the role of the son 'Michael'

அப்பா வேடத்துக்கு ‘பிகில்’ மகன் வேடத்துக்கு ‘மைக்கேல்’

அப்பா வேடத்துக்கு ‘பிகில்’ மகன் வேடத்துக்கு ‘மைக்கேல்’
‘தெறி,’ ‘மெர்சல்’ ஆகிய படங்களை தொடர்ந்து அட்லீ டைரக்‌ஷனில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு, ‘பிகில்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
‘பிகில்’ படத்தில் விஜய், அப்பா-மகனாக 2 வேடங்களில் நடிக்கிறார். அப்பா வேடத்துக்கு, ‘பிகில்’ என்றும், மகன் வேடத்துக்கு, ‘மைக்கேல்’ என்றும் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. மகன் விஜய், கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.

கதாநாயகி நயன்தாரா வேடத்துக்கு, ‘ஏஞ்சல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது, விஜய் நடிக்கும் 63-வது படம். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் ஆகிய மூன்று பேரும் தயாரிக்கிறார்கள்.

ஏராளமான முன்னணி நடிகர்-நடிகைகளும், இந்திய திரையுலகின் தலை சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இடம் பெறுகிறார்கள். ‘வில்லு’ படத்துக்கு பிறகு விஜய் யுடன் நயன்தாரா ஜோடியாக நடித்து வரு கிறார். விவேக், ஜாக்கி ஷராப், கதிர் ஆகிய மூன்று பேரும் முக்கிய வேடங்களில் நடிக் கிறார்கள்.

படப்பிடிப்பு முழுவதும் சென்னை நகரிலும், சுற்றுவட்டாரங்களிலும் நடைபெற்று வருகிறது. பிரமாண்டமான கால்பந்து விளையாட்டு ஸ்டேடியம், சென்னை நேப்பியர் பாலம், பாரிமுனையில் உள்ள ஐகோர்ட்டு ஆகியவை அரங்குகளாக அமைக்கப்பட்டு அதில் படப் பிடிப்பு நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.