சினிமா செய்திகள்

விடுதியில் தங்கி இருந்த நடிகை மாயம் + "||" + Staying in the cafeteria Actress Missing

விடுதியில் தங்கி இருந்த நடிகை மாயம்

விடுதியில் தங்கி இருந்த நடிகை மாயம்
ஐதராபாத்தில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த நடிகை லலிதாவை காணவில்லை என்று அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
தெலுங்கு டி.வி. தொடர்களில் நடித்து ஆந்திராவில் பிரபலமாக இருப்பவர் லலிதா.

இவர் ஐதராபாத்தில் உள்ள எஸ்.ஆர்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்தார். கடந்த சில நாட்களாக லலிதாவை காணவில்லை.

அவரது பெற்றோர் இதுகுறித்து சஞ்சீவ ரெட்டி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது:-

“லலிதா கடந்த ஒரு வருடமாக எஸ்.ஆர்.நகரில் உள்ள விடுதியில் தங்கி டி.வி. தொடர்களில் நடித்து வந்துள்ளார். அவரது பெற்றோர் அனந்தபூர் மாவட்டத்தில் வசிக்கின்றனர். அவர்கள் கடந்த 17-ந் தேதி லலிதாவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனாலும் பேசமுடியவில்லை.

இதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு மகளை தேடி ஐதராபாத் வந்துள்ளனர். விடுதிக்கு சென்று விசாரித்தபோது லலிதா அங்கிருந்து 2 மாதங்களுக்கு முன்பே சென்றுவிட்டதாக கூறியுள்ளனர். அவரை தேடி வருகிறோம் என்றார். நடிகை லலிதா என்ன ஆனார்? என்று தெரியவில்லை.