சினிமா செய்திகள்

விபத்தில் கால் முறிந்ததா?நடிகை அனுஷ்கா விளக்கம் + "||" + Actress Anushka Description

விபத்தில் கால் முறிந்ததா?நடிகை அனுஷ்கா விளக்கம்

விபத்தில் கால் முறிந்ததா?நடிகை அனுஷ்கா விளக்கம்
படப்பிடிப்பில் நடிகை அனுஷ்கா தவறி விழுந்து கால் எலும்பு முறிந்ததாக தகவல் வெளியானது. அதற்கு நடிகை அனுஷ்கா விளக்கமளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியான அனுஷ்கா நடிப்பில் பாகுமதி படம் கடந்த வருடம் ஜனவரியில் திரைக்கு வந்தது. அதன்பிறகு அவருக்கு படங்கள் இல்லை. ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் உடல் எடையை கூட்டி நடித்து விட்டு பின்னர் அதை குறைக்க முடியாமல் கஷ்டப்பட்டார். கடும் உடற்பயிற்சிகள், உணவு கட்டுபாடு என்று எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டும் பலன் இல்லை.

இதனாலேயே அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. அதன்பிறகு வெளிநாடு சென்று ஒரு மாதம் சிகிச்சை எடுத்து பழைய தோற்றத்துக்கு திரும்பினார். தற்போது மாதவன் ஜோடியாக ‘சைலன்ட்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் இது தயாராகிறது. அமிதாப்பச்சன், சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்திலும் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்தபோது அனுஷ்கா உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்து கால் எலும்பு முறிந்ததாகவும் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சில நாட்கள் ஓய்வில் இருந்தார் என்றும் தகவல் வெளியானது. இதனால் நடிகர்-நடிகைகள் பலர் அனுஷ்காவை தொடர்புகொண்டு உடல் நலம் குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர்.

ரசிகர்களும் வலைத்தளத்தில் அனுஷ்காவின் நலம் விசாரித்தார்கள். இதைத்தொடர்ந்து அனுஷ்கா தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் உடல் நலத்தோடு ஆரோக்கியமாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.