சினிமா செய்திகள்

விஜய் 2-வது திருமண நேரத்தில் அமலாபாலின் புதிய டுவிட்டர் பதிவு + "||" + At the time of Vijay's 2nd marriage Amalapaul New Twitter msg

விஜய் 2-வது திருமண நேரத்தில் அமலாபாலின் புதிய டுவிட்டர் பதிவு

விஜய் 2-வது திருமண நேரத்தில் அமலாபாலின் புதிய டுவிட்டர் பதிவு
விஜய் சேதுபதி படத்தில் இருந்து அமலாபாலை சில தினங்களுக்கு முன்பு நீக்கினர்.
ஆடை படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்துள்ள காட்சிகள் சமீபத்தில் டிரெய்லரில் வெளியானது. இதனால் அவர் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. தன்னை நீக்கியது தயாரிப்பாளரின் ஆணாதிக்க அகந்தையான மன நிலையை காட்டுகிறது என்று அமலாபால் கண்டித்தார்.

இந்தநிலையில் டைரக்டர் விஜய்யின் 2-வது திருமண தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோது 2014-ல் விஜய்யை அமலாபால் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

பின்னர் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு படங்களில் அமலாபால் கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார். அதன் உச்சமாக ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளார். தற்போது டைரக்டர் விஜய்யின் 2-வது திருமண தகவல் வெளியாகி உள்ள நேரத்தில் அமலாபால் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

“நான் போராடுவேன். வாழ்வேன். பெரிய சிறிய தடைகள் வரட்டும். அதில் இருந்து மீண்டு வந்து ஜொலிப்பேன். உயரத்தில் நிற்பேன். பிரச்சினைகளை நசுக்கி ஊதித் தள்ளுவேன். எனது பலத்தை நான் நம்புகிறேன். சுதந்திரமும் மகிழ்ச்சியும் முக்கியம். தைரியம் இருந்தால் தோல்வி அடைய மாட்டீர்கள். இதுதான் நான். இது எனது ஆடையின் கதை”

இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.