சினிமா செய்திகள்

திருமணமாகாத நடிகைக்கு 3 வயது மகள் + "||" + 3 year old daughter of unmarried actress

திருமணமாகாத நடிகைக்கு 3 வயது மகள்

திருமணமாகாத நடிகைக்கு 3 வயது மகள்
நடிகைகளின் காதல், திருமணம், குடும்பம் உள்ளிட்ட சொந்த விவரங்களை தெரிந்துகொள்ள ரசிகர்களுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. இதன் மூலம் நடிகைகள் விமர்சனங்களுக்கும் உள்ளாகிறார்கள்.
தற்போது இந்தி நடிகை மாஹி கில் திருமணமாகாத தனக்கு குழந்தை இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். இவர் 2008-ல் வெளியான தேவ் டி படத்தில் நடித்து பிரபலமானவர். மாஹி கில் கூறியதாவது:-

“எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அடுத்த மாதம் (ஆகஸ்டு) அந்த குழந்தைக்கு 3 வயது ஆகப்போகிறது. ஒரு குழந்தைக்கு தாய் என்பதை பெருமையாக கருதுகிறேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குழந்தை இருப்பதை ஏன் மறைத்தீர்கள் என்று கேட்கின்றனர். யாரும் அதுபற்றி என்னிடம் இதுவரை கேட்காததால் சொல்லவில்லை.

திருமணம் எப்போது செய்துகொள்வீர்கள்? என்று கேட்கின்றனர். அதற்கு என்ன தேவை இருக்கிறது. திருமணம் என்பது அவரவர் சொந்த விருப்பத்தை பொறுத்தது. திருமணம் செய்துகொள்ளாமலேயே குடும்பம் குழந்தைகள் என்று வாழ முடியும். எனக்கு திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை இருப்பதில் பிரச்சினை இல்லை.

ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை மற்றும் குறிக்கோள்கள் உள்ளன. திருமணம் என்பது அழகான விஷயம். ஆனாலும் அது அவரவர் சொந்த விருப்பத்தை பொறுத்தது. நான் எப்போது திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேனோ? அப்போது திருமணம் நடக்கும்.”

இவ்வாறு மாஹி கில் கூறினார்.